முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Udhayanidhi Stalin | பிரச்சார பயணத்தின்போது விவசாயிகளுடன் செல்ஃபி எடுத்து பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin | பிரச்சார பயணத்தின்போது விவசாயிகளுடன் செல்ஃபி எடுத்து பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின்..

திருவாரூரில் விவசாயிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

திருவாரூரில் விவசாயிகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

திருவாரூரில் வயல்வெளியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை கடந்த சில தினங்களுக்கு முன் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதியான எடையூரில் உதயநிதி ஸ்டாலின் வந்து கொண்டிருந்தபோது அங்கே வயல்வெளியில் விவசாய பெண் தொழிலாளர்கள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி வயலுக்குச் சென்று பெண் விவசாய தொழிலாளர்களிடம் விவசாயப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் படிக்க.. Rajinikanth | Rajini Makkal Mandram | மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்.. நாளை ரசிகர்களுடன் சந்திப்பு எனத் தகவல்..

திருவாரூரில் பெண் விவசாயிகளிடம் பேசும் உதயநிதி ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து விவசாய தொழிலாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அப்போது திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: DMK, DMK Campaign, Farmers, Selfie, Thiruvarur, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin