Home /News /tamil-nadu /

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாக உள்ள எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி புகார்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாக உள்ள எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும்: இந்திய தேசிய லீக் கட்சி புகார்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நாளை வெளியாக உள்ள எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் புகார் அளித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் தமிழகத்தில் நாளை திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், எப்.ஐ.ஆர் திரைப்பட டிரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் உடனடியாக தமிழகத்தில் இப்படத்தை தடை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

    Also read: திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக தலை வைத்து கூட படுக்க முடியாது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    மேலும் ஏற்கனவே எப்.ஐ.ஆர் திரைப்படத்தை மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக இந்த படத்தை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியான துப்பாக்கி படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்ததாக அவர் கூறினார். எப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: FIR, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி