Home /News /tamil-nadu /

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான பாடல் ஒன்றையும் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்ல சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பமும் இது தான் என்றார்.

    மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் மட்டும் சுருங்கி விடக்கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் பள்ளிகளை கண்டறிந்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அன்பில் மகேஷ், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும் ஒன்றிய அரசும் தனது நிதியை வழங்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

    மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களை விட பெற்றோர்களே மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய அவர்
    மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    Also read: பதவியேற்றபோது வெல்க உதயநிதி என கூறிய திமுக எம்.பி.... உடனே குடியரசுத் துணை தலைவர் ரியாக்சன்!

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Minister Anbil Mahesh

    அடுத்த செய்தி