முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடைகாத்த கோழி போல பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினால், தலைவராக முடியாது: அண்ணாமலை

அடைகாத்த கோழி போல பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினால், தலைவராக முடியாது: அண்ணாமலை

திமுகவில் அடை காத்த கோழி போல பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர் உதயநிதி, அவர் ஒருநாளும் தலைவர் ஆக முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவில் அடை காத்த கோழி போல பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர் உதயநிதி, அவர் ஒருநாளும் தலைவர் ஆக முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுகவில் அடை காத்த கோழி போல பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர் உதயநிதி, அவர் ஒருநாளும் தலைவர் ஆக முடியாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

    தமிழக பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவின், மாநில செயற்குழு கூட்டம், அப்பிரிவின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நான்கு பா.ஜ.க, எம்.எல்.ஏக்கள் வெற்றிப் பெற்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய வழக்கறிஞர்களுக்கு கேடயம் வழங்கி, வழக்கறிஞர் பிரிவுக்கான தனி சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார்.

    அதை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது, சமுதாயத்தில் நெருக்கமாக பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு. வழக்கறிஞர்களுக்கும், அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில் பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்துள்ளனர். காலத்தின் கட்டாயத்தால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தே தீரும்.

    தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தினால் அசிங்கப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்களே பெரிய தலைவர்களாக வர முடியும். அடைகாத்த கோழி மாதிரி, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது.

    தி.மு.கவில், பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாரும் தலைவராக முடியாது. 2024ல் இந்தியா ஒரே கட்சியை அதாவது, பா.ஜ.,வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

    Also read: காசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வேண்டும்: அமைச்சர் எல்.முருகனிடம் விஜயேந்திரர் வேண்டுகோள்!

    2024ல், 400 எம்.பி.,களை, பா.ஜ.க. பெறப்போவதை தடுத்து நிறுத்த முடியாது. சுயநலத்திற்காக தலைவர்கள் இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களது வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி உங்களை தேடி வரும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    அதற்கு முன்னதாக மதுரவாயலில் ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு செய்தியாளர்களை சந்திந்த அவர் பேசுகையில், தமிழகத்தில் மூன்றரை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 65 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: