முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “அன்பை பகிர்ந்தோம்”... ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி..!

“அன்பை பகிர்ந்தோம்”... ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி..!

உதயநிதி

உதயநிதி

டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அதன் ஒருபகுதியாக,

தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மணமகள் பூஜா மற்றும் மணமகன் சிவம் ஆகியோருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளை , டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். டெல்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகளையும் உதயநிதி சந்தித்துப் பேசினார்.

இன்று ( செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒரு மணிக்கு மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மனு வழங்க உள்ளார். அதன்பின்னர், பிற்பகல் 3 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார். மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியையும் உதயநிதி சந்திக்க சந்திக்க உள்ளார்.

First published:

Tags: Governor Banwarilal purohit, Udhayanidhi Stalin