முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க இலவச போக்குவரத்து சேவை வழங்க ஊபர் நிறுவனத்துடன் கைகோர்த்தது தேர்தல் ஆணையம்!

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க இலவச போக்குவரத்து சேவை வழங்க ஊபர் நிறுவனத்துடன் கைகோர்த்தது தேர்தல் ஆணையம்!

“ஊபர்” நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இலவச போக்குவரத்து சேவையை வழங்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஊபர் நிறுவனம் இணைந்துள்ளது.

  • Share this:
தேர்தல் நாளன்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலிருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கே திரும்ப இலவச சவாரி சேவையை வழங்குவதற்காக “ஊபர்” நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

இதன் மூலம் சென்னை, திருச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிக்கு, குறைந்தபட்சம் 5 கிமீட்டருக்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீதம் கட்டண தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் வாக்குப்பதிவு தினத்தன்று இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஊபர் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும் ஜனநாயக கடமையை செயல்படுத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்திலிருந்து அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர “ஊபர்” நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் 2021 மேற்படி இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் ஊபர் நிறுவனம் வழங்க உள்ளது.

மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில் இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கிமீ தூரத்திற்குட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை 100 % கட்டண தள்ளுபடியுடன் அளிக்கப்படும்.

சவாரி செய்வோர் கைப்பேசியின் மூலம் ஊபர் (uber) செயலி வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

எனவே 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றலாம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 
Published by:Arun
First published: