• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கிய அரபு அமீரகம்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு கோல்டன் விசா வழங்கிய அரபு அமீரகம்

கோல்டன் விசா

கோல்டன் விசா

இந்திய நடிகர்களான ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்

  • Share this:
    தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவருக்கு கோல்டன் விசாவை வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவப்படுத்தியுள்ளது.

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒன்றான திண்டிவனத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின் பேகம். திருச்சி சங்கரா ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2008ம் ஆண்டு நஸ்ரின் பேகம் மருத்துவர் பட்டம் வாங்கினார். பின்னர்,  மருத்துவ பணிகாக கடந்த 2013ம் ஆண்டு துபாய் (Dubai) சென்ற அவருக்கு 2017ம் ஆண்டு அதற்கான உரிமம் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக துபாய ஆயுஸ் மெடிக்கல் டெரிட்ரி மேனேஜிங் பார்ட்னராக நஸ்ரின் பேகம் பணியில் உள்ளார். இந்நிலையில், நஸ்ரின் பேகத்திற்கு கோல்டன் விசா வழங்கி கௌரவிக்க துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

    கோல்டன் விசா என்றால் என்ன?

    ஐக்கிய  அரபு அமீரகம் நாட்டில் சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடியவை ஆகும். சிறந்த முதலீட்டாளர்கள், தங்கள் துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்கள்,  தொழிலதிபர்களுக்கு இந்த விசாவை வழங்கி  அந்நாடு கௌரவிக்கிறது. அமீரகத்தின் குடிமக்களுக்கு ஒப்பாக இந்த விசாவை வைத்திருப்பவர்கள் கருதப்படுவார்கள். இந்திய நடிகர்களான ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

    இதையும் படிக்க: தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு: சிறந்த நகராட்சி உதகை!


    மருத்துவர்களும் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். அமீரகத்தில் தங்கி பணியாற்றும் மருத்துவர்கள் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அறிவியல்,புதுமை, சுகாதாரம் போன்றவற்றில் சிறந்தவர்கள் 10 ஆண்டுகள் வரை அமீரகத்தில் தங்கியிருக்க இந்த விசா உதவும்.

    மேலும் படிக்க: பள்ளிகளைத் திறக்க தயாராகும் அரசு: பெற்றோர்கள், மருத்துவர்கள் கருத்து என்ன?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: