ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நவம்பர் 19, 20-ம் தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

நவம்பர் 19, 20-ம் தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் - தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

தட்டச்சுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தட்டச்சுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பொழியும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதி காலை தமிழகம் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 15ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் தட்டச்சு தேர்வுகள் நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அடுத்த ஆண்டு முதல் முதுநிலை மருத்துவப்படிப்பு நீட் ரத்து?

    நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Exam, Heavy Rainfall, Tamil Nadu, Tamil Nadu Rain