Home /News /tamil-nadu /

தட்டச்சு பாடங்களுக்கான சான்றிதழ் வகுப்புகள் 25 நாட்களில் முடித்துவைப்பு

தட்டச்சு பாடங்களுக்கான சான்றிதழ் வகுப்புகள் 25 நாட்களில் முடித்துவைப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனோ தீவிர பரவல் காரணமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த தட்டச்சு பாடங்களுக்கான தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் வகுப்புகள் 25 நாட்களில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா, ஒமைக்ரான் பரவலை அடுத்து இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்படுள்ளது. இந்த ஊரடங்கில் 50% பொதுப் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளில் அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து வகை பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 20-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சென்னை மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல, பயிற்சி நிலையங்களும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலுல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் பயிற்சி நிலையங்கள்(Training & Coaching Centres) செயல்படத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவால் கல்லூரிகளுக்கு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மாணவ- மாணவிகள்- சென்னையில் அலைமோதிய கூட்டம்



     இந்த காரணத்தினால் தற்போது 39 மையங்களில் நடைபெற்று வரும் தட்டச்சு பாடங்களில் தொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் 30 நாட்கள் என்பதை 25 நாட்களாக குறைத்து இன்றுடன் (5.1.2022) முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு வழிகாட்டுதலின்படி தேர்வு நடைபெறும் நாள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Lockdown

    அடுத்த செய்தி