கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த இருவர் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - ஈரோட்டில் பயங்கரம்

Youtube Video

ஈரோடு அருகே, கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் பட்டப் பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 • Share this:
  ஈரோடு அருகே உள்ள கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் 38 வயதான குணா என்ற குணசேகரன்; கிருஷ்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் 30 வயதான கலை என்ற கலைச்செல்வன். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அப்பகுதியின் பிரபல ரவுடி பிரகலாதன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் குணா முதன்மைக் குற்றவாளியாகவும், கலைச்செல்வன் 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு, கைதாகினர்.

  ஜாமினில் வெளியே வந்த இவர்கள், ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் குணா, கலை மற்றும் கூட்டாளிகள் என 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பிற்பகல் 2 மணியளவில், ஈரோடு வீரப்பன்சத்திரம், சிதம்பரனார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது; அதில் தகராறு முற்றிய நிலையில் ஒரு தரப்பினர் சேர்ந்து குணா மற்றும் கலையை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

  பி்ன் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கற்களால் தாக்கியும் இரண்டு பேரையும் கொலை செய்து விட்டுத் தப்பியோடி விட்டனர்.

  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஈரோடு போலீசார், சாக்கடையில் இருந்து குணசேகரன் சடலத்தை மீட்டனர்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கலைச்செல்வன் சடலத்தையும் மீட்டனர்

  இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு நபரை இந்தக் கும்பல் ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதாகவும் அப்போது ஏற்பட்ட மோதலில் தான் எதிர்த் தரப்பு இவர்கள் இருவரையும் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

  கொலையைச் செய்த குற்றவாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: