டிக்டாக்கில் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது

திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்டாக்கில் சர்ச்சை வீடியோக்களை வெளியிட்ட 2 இளைஞர்கள் கைது
டிக்டாக்
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கருங்கதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான பச்சையப்பன்; லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்

ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள பச்சையப்பன் சும்மா இருக்காமல், ஒரு தரப்பினரை அவதூறாக பேசி டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டார்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, ஆகாரம் கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து ஆரணி கிராமிய போலீசாரிடம் புகாரளித்தார்.


அவர்கள் பச்சையப்பனைப் பிடித்து விசாரித்து, அவர் வீடியோ வெளியிட்டது உண்மைதான் என்பதை உறுதி செய்தனர்.

பின்னர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் வெளியிட வைத்தனர். பச்சையப்பனைப் போல, செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்னொரு இளைஞர் சிக்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இரணிய சித்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டார். இதையடுத்து, வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார், பிரபாகரனைக் கைது செய்துள்ளனர். 

Also read...  ஊரடங்கால் வேலை இழந்து திருடனாக மாறிய தச்சு தொழிலாளி - ஒரே நாளில் சிக்கிய சம்பவம்


Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading