ராணிப்பேட்டை : இரு கிராம பிரச்னையில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் கொலை

ராணிப்பேட்டை : இரு கிராம பிரச்னையில் புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் கொலை

படுகொலை

இரட்டைக் கொலை வழக்கில் புலி என்கின்ற சுரேந்தர் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மதன், அஜித் உள்ளிட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

 • Share this:
  ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரண்டு கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல் மூட்டைகளுக்கு தீவைப்பு ,சாலை மறியல் என்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் 21 வயதான அர்ச்சுனன், 26 வயதான சௌந்தர், செம்பேடு கிராமத்தைச்சேர்ந்த 23 வயதான சூர்யா மற்றும் 16 வயதான சிறுவன். இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்கும் பக்கத்து கிராமமான பெருமாள் ராஜபேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே வம்புச் சண்டைகளால் ஏற்கனவே பிரச்னை இருந்து வந்துள்ளது. இத்துடன் தேர்தல் நேரத்தில் நடந்த சில பிரச்சனைகளும் சேர்ந்து இரு கிராம இளைஞர்களுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது.

  இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை, சோகனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் செங்கனூர் சாலை என்ற பகுதியில் உள்ள சிறிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பெருமாள் ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவரும், அரக்கோணம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியின் மகனுமான 28 வயதான சத்யாவை தொடர்பு கொண்டு தாங்கள் இருக்கும் இடத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர். அதை நம்பி சோகனூர் கிராமத்திற்கு வந்த சத்யாவை போதையில் இருந்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, தான் தாக்கப்பட்டதை போன் மூலமாக தனது நண்பர்களிடம் தெரிவித்து உதவிக்கு வரும்படி அழைத்துள்ளார். சத்யாவின் நண்பர்களும் அந்த பகுதிக்கு வர இருதரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தள்ளுமுள்ளு பிரச்னையாக ஆரம்பித்த விவகாரம் கத்தி அரிவாள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. நான்கு பேரையும் மீட்ட அப்பகுதி மக்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

  இதில் படுகாயமடைந்த, திருமணமாகி 10 நாட்களே ஆன 24 வயதான சூர்யா மற்றும் 21 வயதான அர்ச்சுனன் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ஓரே கிராமத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த பகுதியில் உள்ள திருத்தணி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சோகனூர் கிராமத்தில் உள்ள பெருமாள் ராஜபேட்டை பகுதியை சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் வயலில் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த 500 மூட்டை நெற்குவியலுக்கும் பொதுமக்கள் தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது

  இதற்கிடையே இரட்டைக் கொலை வழக்கில் புலி என்கின்ற சுரேந்தர் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மதன், அஜித் உள்ளிட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
  Published by:Ram Sankar
  First published: