தூத்துக்குடியைச் சேர்ந்த இரு பெண்கள் சென்னையில் முதல்வர் வீடு அருகே தற்கொலை முயற்சி...

தூத்துக்குடியைச் சேர்ந்த இரு பெண்கள் சென்னையில் முதல்வர் வீடு அருகே தற்கொலை முயற்சி...

கோப்புப் படம்

முதல்வர் வீடு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 • Share this:
  தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள், ஜெய மீனாம்பிகை ஆகிய இரு பெண்களும் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடின் முன்பு தற்கொலைக்கு முயன்றனர். கிருஷ்ணம்மாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தும், மீனாம்பிகை கழுத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றனர். தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  போலீசார் விசாரணை மேற்க்கொண்டத்தில், அவர்கள் முதல்வரை சந்திக்க வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அக்குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் வீடு அருகிலேயே உள்ள முண்டகண்ணி அம்மன் கோயிலுக்கு சென்று பையில் வைத்திருந்த விஷத்தை அருந்தி கிருஷ்ணாம்மாள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மீனாவும் கழுத்தில் கயிறை இறுக்கி தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  மேலும், முதல்வர் வீட்டில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  அவர்கள் எதற்காக முதல்வரை சந்திக்க வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: