ஆம்னி காரில் வந்த ஆடு திருடர்கள்...! சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்

காருக்குள் மூன்று வெள்ளாடுகள் இருந்துள்ளன. ஆடுகள் குறித்து கார் ஓட்டுநரிடம் ராசன் கேள்வி எழுப்பியபோது, காருக்கு முன்னாள் சைக்கிளை தள்ளிவிட்டு வேகமாக காங்கேயம் சென்றார்.

news18
Updated: January 10, 2019, 1:38 PM IST
ஆம்னி காரில் வந்த ஆடு திருடர்கள்...! சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
ஆடு திருடனை சரமாரியாக தாக்கும் பொதுமக்கள்
news18
Updated: January 10, 2019, 1:38 PM IST
காங்கேயத்தில் ஆம்னி காரில் வந்து ஆடு திருடிய இருவரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் சென்னிமலை சாலையில் தேனீர் கடை நடத்தி வரும் ராசன் என்பவர், கடைக்கு எதிரிலேயே 5-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இ

ன்று காலை ஆடுகள் கட்டப்பட்டிருந்த பகுதியில் ஆம்னி கார் நிற்பதை கண்டு சந்தேகமடைந்த ராசன், அதன் அருகில் சென்று பார்த்தார்.

அப்போது, காருக்குள் மூன்று வெள்ளாடுகள் இருந்துள்ளன. ஆடுகள் குறித்து கார் ஓட்டுநரிடம் ராசன் கேள்வி எழுப்பியபோது, காருக்கு முன்னாள் சைக்கிளை தள்ளிவிட்டு வேகமாக காங்கேயம் சென்றார்.

அதை அறிந்த அப்பகுதி மக்கள் தடுப்புகளை ஏற்படுத்தி காரை நிறுத்தி, காரில் இருந்த இருவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Also see...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...