தீபாவளி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள்..!

இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும்.

தீபாவளி போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள்..!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: October 24, 2019, 2:25 PM IST
  • Share this:
தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் திருச்சியில் 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

வரும் ஞயிறு 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இதனையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகியிருப்பார்கள். இந்நிலையில் அவர்களின் சிரமத்தை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி பேருந்துகளுக்கு திருச்சி மத்திய பேருந்து அருகே நிலையம் வருமான வரித்துறை அலுவலகம் அருகேயும், மதுரை, புதுக்கோட்டை வழித்தடங்களுக்கு மன்னார்புரத்திலும் தற்காலிக பேருந்து நிலையத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் கொடியசைத்து தொடங்கி


வைத்தார்.

இன்று முதல் வரும் 30ம் தேதி வரை தற்காலிக பேருந்து நிலையம் செயல்படும்.

பார்க்க :எலுமிச்சை விலை மூன்று மடங்கு வீழ்ச்சி… விவசாயிகள் கவலை…

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading