வேலூர் அருகே ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வேலூர் அருகே ஏரியில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உயிரிழந்த மாணவர்கள்
  • Share this:
வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அஜித்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் நண்பர்களுடன் குளித்தபோது, மண் சரிவு ஏற்பட்டு பள்ளத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏரியில் நடக்கும் மணல் கொள்ளையே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உடலை போலீசிடம் தர மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இறுதியாக ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக அணைக்கட்டு வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Also see:

First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading