ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாளை செல்லும் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நாளை செல்லும் சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே

நாளை சிறப்பு இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதில் நாளை செல்ல இருந்த இரண்டு முக்கிய ரயில்கள் ரத்து செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளது.

  ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

  நாளை ( 24.10.2022 ) திருவாரூர் - காரைக்குடி செல்லும் சிறப்பு ரயில் மற்றும் காரைக்குடி - திருவாரூர் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  1. வண்டி எண் : 06197 , திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் காலை 08.10 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  2.வண்டி எண் : 06198 , காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் டெமு (DEMU) எக்ஸ்பிரஸ் மாலை 16.00 மணிக்கு புறப்படவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Southern railway, Special trains