ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எங்களைக் காட்டி அவர்கள் தப்பிக்க நினைக்கின்றனர்...! பெண் சிசுக்கொலை விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன அலுவலர்கள் போராட்டம்

எங்களைக் காட்டி அவர்கள் தப்பிக்க நினைக்கின்றனர்...! பெண் சிசுக்கொலை விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன அலுவலர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெண் சிசுக்கொலை தொடர்பாக சமூகநலத்துறை அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவைக் கண்டித்து இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அடுத்த புள்ளநேரியில் கடந்த மார்ச் 2 தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண்குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது.

இது தொடர்பாக குழந்தையின் தாய் சௌமியா , தந்தை வைர முருகன் மற்றும் தாத்தா சிங்க தேவர் ஆகியோரை செக்கானூரணி காவல்துறையினர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், புள்ளநெரி கிராமம் மத்திய சிறைச்சாலையில் உள்ள குழந்தையின் தாய் தந்தை தாத்தா மற்றும் நடந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும் விசாரணை நடத்திச் சென்றார் .

இந்த நிலையில் இன்று செல்லம்பட்டி பகுதி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பிரேமா மற்றும் சமூக நலத்துறை ஊர் நல அலுவலர் முத்துப்பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சாந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணி இடைநீக்கத்தை எதிர்த்து பிரேமா மற்றும் முத்துப்பிள்ளை மாவட்ட சமூக நல துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . நாங்கள் பணியை முறையாக செய்த நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி , எங்களிடம் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி சாந்தி ஏமாற்றிக் கையப்பம் பெற்றுக்கொண்டு எங்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாகவும், உயரதிகாரிகள் தப்பிக்க தங்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் , மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக காரணத்தை காட்டி உயரதிகாரிகள் தப்பிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட சமூகத் துறை அதிகாரியிடம் கேட்டபோது உரிய விளக்கம் தர மறுத்து விட்டதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai