முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வீட்டு கொல்லைப் புறத்தில் சாராயம் பதுக்கல்... நாகையில் இருவர் கைது

வீட்டு கொல்லைப் புறத்தில் சாராயம் பதுக்கல்... நாகையில் இருவர் கைது

சாராயத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

சாராயத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

நாகை மாவட்டம் அகரகடம்பனூர் கிராமத்தில் வீட்டு கொல்லைப் புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். 

  • 1-MIN READ
  • Last Updated :

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மற்றும் சாராய கடைகள் சமீபத்தில் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வழக்கம்போல புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுவகைகள் மற்றும் சாராய மூட்டைகள் நாகை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுவது தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள அகரகடம்பனூர் கிராமத்தில் ஒருவரது வீட்டில் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அகரகடம்பனூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் வீட்டு கொள்ளைபுறத்தில் புதுவை மாநில சாராய மூட்டைகள் இருப்பதை கண்டறிந்தனர்.

விசாரணையில் சாராய பாக்கெட்டுகளை அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன் விற்பனைக்காக மதியழகன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து 20 மூட்டைகளில் இருந்த ஆயிரம் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தேவேந்திரன் மற்றும் மதியழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Also read... வடமாநில பெண்ணை அடைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see...

First published: