வேலூர் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன் பாகாயத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி குளிப்பதை, அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் படமெடுத்து, மிரட்டியுள்ளனர். இதனால் விரக்யடைந்த மாணவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
90% காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் மற்றும் கணபதி என்ற தாமஸ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது போக்சோ சட்டம் பதிவாகி இருந்த நிலையில், குண்டர் சட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்தார். அதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி ஆகாஷ் மற்றும் கணபதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் சிறுவன் ஒருவனுக்கும் தொடர்பு உள்ளது. சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் கொரோனா பிரச்னை உள்ளதால் அந்த சிறுவன், பெயிலில் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.