Home /News /tamil-nadu /

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தெய்வானை அம்மன் சிலை கடத்தல்: இருவர் கைது..!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தெய்வானை அம்மன் சிலை கடத்தல்: இருவர் கைது..!

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை

இது தொடர்பாக தனிப்படை போலீசார் சிலைக்கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்ரீதர், கண்ணன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தூத்துக்குடியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தெய்வானை அம்மனின் ஐம்பொன் சிலைய கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் சாமி சிலைகள் கடத்தப்படுவதாக தனிப்படையைச் சேர்ந்த சில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையை சேர்ந்த 4 போலீசார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, தேனியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்தது. அதிலிருந்து ஒரு வாலிபர் லேப்டாப் பேக்குடன் இறங்கினார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் இருந்த பேக்கை வாங்கி சோதனையிட்டனர்.

    அப்போது அதனுள் சுமார் முக்கால் அடி உயரத்திலான சாமி சிலை இருந்தது. அதனை போலீசார் ஆய்வு செய்தபோது அது ஐம்பொன்னால் ஆன தெய்வானை சாமிசிலை என்பதும், எடையிடபட்டதில் அது 3.100 கிலோ என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அதனை அங்கிருந்து கடத்தி வந்தது பெரியகுளம் அருகேயுள்ள வடகரையை சேர்ந்த சசிகுமாரின் மகன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த சிலையை வாங்கி செல்வதற்காக ஏரலைச் சேர்ந்த லிங்ககுமார் என்பவர் காத்திருந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்த லிங்க குமாரையும் போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து இரு செல்போன்களையும் போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் தனிப்படை போலீசார் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேனியை சேர்ந்த பிரபல சிலைக்கடத்தல் புள்ளி ஒருவர் இதனை கொடுத்து அனுப்பியதும், லிங்ககுமாரின் கூட்டாளியிடம் இருந்து அதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுவர கூறியிருந்ததும் தெரியவந்தது.

    மேலும் இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு விஐபிக்கு பூஜை அறையில் வைப்பதற்காகவும், போலீசார் கண்ணில் மண்ணை தூவும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக லேப்டாப் பையில் வைத்து அரசு பஸ்சில் சர்வ சாதாரணமாக கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

    மீட்கப்பட்டுள்ள இந்த தெய்வானை சிலையில் மதிப்பு சுமார் ஒரு கோடியாகும். இது தொடர்பாக தனிப்படை போலீசார் சிலைக்கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்ரீதர், கண்ணன் உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு, தனிப்படை என பலரும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் சாதாரணமாக போலீசார் அதிரடியாக செயல்பட்டு இந்த கடத்தல் கும்பலை சேர்ந்த இருவரை பிடித்து, ஒரு கோடி மதிப்பிலான சிலையை மீட்டுள்ளனர். இவர்களை உயரதிகாரிகள் பாராட்டியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின் தூத்துக்குடியில் கடத்தல் சிலை சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Also see... 
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Statue, Thoothukudi

    அடுத்த செய்தி