ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கையில் கத்தி, பைக்கில் சாகசம்.. ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கையில் கத்தி, பைக்கில் சாகசம்.. ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ரீல்ஸ் வீடியோ எடுத்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

ரீல்ஸ் வீடியோ எடுத்த நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

இருசக்கர வாகனத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ரீல்ஸ் செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சமீப காலமாகவே 'ரீல்ஸ்' எனப்படும் குறுகிய நேர வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து கவனம் பெறுவதை பலரும் வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ், பேஸ்புக் ரீல்ஸ், வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் ஆகியவற்றில் கண்டென்ட்டுகளாக தங்களை காட்டிக்கொண்டு அதன் மூலம் வீயூஸ், லைக்ஸ் ஆகியவற்றை பெற வேண்டும் என பல ஆர்வக்கோளாறு நபர்கள் ஏடாகூடமான செயல்களில் ஈடுபட்டு சிக்குவதும் உண்டு.

  குறிப்பாக, அதிவேகமாக பைக் சாகசங்கள் செய்வது, கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற சேட்டைகளை செய்து பின்னர் அது தொடர்பான புகாரில் காவல்துறையிடம் சிக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அப்படி தான் இரு இளைஞர்கள் சென்னை பெருநகர காவல்துறையிடம் தற்போது சிக்கியுள்ளனர்.

  இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் கத்தியை வைத்துக்கொண்டு ரீல்ஸ் செய்து அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேலும், இரு சக்கர வாகன பம்பரில் கத்தியை வைத்து மாடிஃபைடு செய்துள்ளனர்.

  இதையும் படிங்க: ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

  இந்த வீடியோ யூட்யூபில் ஷார்ட்ஸ் வீடியோவாக பரவிவரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்து சென்னை காவல் துறையை ட்விட்டரில் டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

  சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்தில், இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என பதில் அளித்துள்ளது. தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் கத்தியை காட்டி சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட அந்த இரு இளைஞர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Chennai Police, Video gets viral, Youtube