ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று

சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

சீனாவில் அதிகரித்து வரும் BF 7 புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதையடுத்து அதிகரிக்க தொடங்கும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்க, மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் இதுவரை BF 7 புதிய வகை கொரோனா தொற்று பரவல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். தமிழகத்திலும் கொரோனா பரவல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிஎஃப் 7 அதிகரித்து வரும் நாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு  கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவிலிருந்து இலங்கை வழியாக வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பரக்குன்றத்தை சேர்நத 39 வயது பெண் மற்றும் அவரது 5 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் அறிகுறி ஏதும் இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு பிஎப் 7 வகை கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய அவர்களது மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழக்தில் இன்று ஒரே நாளில் 10 கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 55 பேர் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, CoronaVirus, Omicron BF 7 Variant