Home /News /tamil-nadu /

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய திருவாவடுதுறை ஆதீன மெய்க்காவலர்!

பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய திருவாவடுதுறை ஆதீன மெய்க்காவலர்!

மெய்க்காவலரான ஜெகன்ராஜா

மெய்க்காவலரான ஜெகன்ராஜா

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரையும் கிராம மக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • News18
  • Last Updated :
திருவாவடுதுறை ஆதீனத்தின் மெய்க்காவலர், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியரின் மெய்க்காவலரான ஜெகன்ராஜா, ஞாயிற்றுக்கிழமை இரவு திருவாவடுதுறை கடை வீதியில் குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த  மெய்க்காவலரான ஜெகன்ராஜா யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து , அதே பகுதியை சேர்ந்த மதி என்பவரை காலில் சுட்டுள்ளார். இதை அந்த கிராம நாட்டாமை செல்வராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது அவரையும் பாரபட்சமின்றி ஜெகன்ராஜா காலில் சுட்டுள்ளார். இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அப்போது அவர், துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரையும் கிராம மக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Also see... புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி இன்று ஒடிசா பயணம்!  

சென்னை அருகே ரிசார்ட்டில் போலீஸ் திடீர் ரெய்டு: 7 பெண்கள் உட்பட 150 ஐ.டி பணியாளர்கள் கைது

Also see... VIDEO | இளைஞர்களால் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் டம்ளரை திரும் போலீசார் 

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Gun shoot

அடுத்த செய்தி