Home /News /tamil-nadu /

இறுதி சடங்கிற்காக சிறுக, சிறுக சேர்த்த பணம் செல்லாதா? வேதனையில் மூதாட்டிகள்!

இறுதி சடங்கிற்காக சிறுக, சிறுக சேர்த்த பணம் செல்லாதா? வேதனையில் மூதாட்டிகள்!

திருப்பூர் அருகே இரண்டு மூதாட்டிகள் தங்களது இறுதி சடங்கிற்காக சேர்த்து வைத்திருந்த 46,000 ரூபாய் மதிப்பிழந்தவை என்பதை தற்போது அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள், தங்கம்மாள் சகோதரிகள் இருவருக்கும் 75 வயதான நிலையில் கணவர்கள் இல்லை. இருவரும் தத்தம் மகன்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துமனைக்கு அழைத்து சென்று மகன்கள் சிகிச்சை அளித்து வந்திருக்கின்றனர். சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாததால் தாயாரிடம் ஏதேனும் பணம் உள்ளதா என கேட்க. தாங்கள் சேமித்து வைத்திருந்த 46,000 ரூபாய் பணத்தை மகன்களிடம் கொடுத்துள்ளனர்.

அவை அனைத்தும் பணமதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்பதைக் கண்டு மகன்கள் அதிர்ச்சியடைந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்த 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதுபற்றித் தெரியாமல் மூதாட்டிகள் பணம் சேர்த்து வைத்திருந்திருக்கின்றனர்.

 

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி