சிவகங்கை அருகே மூன்று ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம் - நகைக்காக இரு பெண்கள் அடித்துக்கொலை

சிவகங்கை அருகே 80 பவுன் நகைக்காக மூன்று ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பத்தில் இரட்டை கொலை நடந்துள்ளது.

சிவகங்கை அருகே மூன்று ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பத்துக்கு நேர்ந்த கொடூரம் - நகைக்காக இரு பெண்கள் அடித்துக்கொலை
சிவகங்கை அருகே 80 பவுன் நகைக்காக மூன்று ராணுவ வீரர்களைக் கொண்ட குடும்பத்தில் இரட்டை கொலை நடந்துள்ளது.
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு தனது மனைவி ராஜகுமாரி, மருமகள் சினேகா, அவரது 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரது மகன் ஸ்டீபன்  ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியாகு நேற்று இரவு தோட்டத்தில் இருந்துள்ளார். வீட்டில் மாமியார் மருமகள் குழந்தையுடன் இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராஜகுமாரி, மருமகள் சினேகாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகையையும், இருந்த பணத்தையும் கொள்ளை அடித்துத் தப்பிச் சென்றனர்.

8 மாத பெண் குழந்தை உயிருடன் தப்பிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்துனர் அதிகாலையில் பார்க்கும்போதுதான் இந்தக் கோரச் சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.


சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருண்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி, கை ரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அழைத்து வந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வீரரின் குடும்பத்தில் இரட்டைக் கொலை நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாகு ஓய்வு பெற்றவர், அவரது மகன் ஸ்டீபன் லடாக்கிலும், இன்னெரு மகன் ராஜாவும் ராணுவத்தில் பணிபுரிகின்றனர்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading