விழுப்புரத்தில் கடந்த 15ஆம் தேதி தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பட்டினியால் இறந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வடமாநிலத்தவர்கள் இருவர் துணியில் சுற்றி சிறுவனை தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சலவை தொழிலாளி சிவக்குமார்(45). இவர் சென்னை சாலையான மேல் தெருவில் தள்ளு வண்டியில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தள்ளுவண்டியில் போர்வையால் மூடிய நிலையில் ஐந்து வயது மதிக்கதக்க சிறுவன் உயிரிழந்து கிடந்தான். சிறுவனின் உடலை கைப்பற்றிய விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரனை நடைபெற்று வருகிறது. சிறுவன் அங்கன்வாடி மைய சீருடை அனிந்திருந்தனால் மாவட்டத்தில் உள்ள 1300 அங்கன்வாடி மையத்திற்கும் சிறுவனின் புகைப்படத்தை அனுப்பி விசாரனை மேற்கொண்டனர் ஆனால் அடையாள் கான முடியவில்லை.
இந்நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்றும், சிறுவனின் குடலில் 2 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லை அதனால் பசியால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனை அடையாளம் கானும் கோணத்தில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் குறித்து விசாரிக்க இரண்டு தணிப்படைகள் ஆந்திராவுக்கும், கர்நாடாகாவுக்கும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வடமாநிலத்தவர்கள் இருவர் சிறுவனை தூக்கி செல்லும் கண்கானிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் சிறுவனை போர்வையில் சுற்றி தூங்கி செல்வதும் அவர் பின்னால் ஒருவர் நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது. புதிய பேருந்துநிலையம் அருகில் எல்லீஸ்சத்திரம் செல்லும் சாலை மற்றும் விராட்டி குப்பம் காலி கோயில் என இரண்டு இடங்களில் குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளனது.
Read More : Omicron Cases | தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்
சிறுவனை தூக்கி செல்பவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுவனின் கைவிரல் ரேகையை பெங்கலூரில் உள்ள ஆதார் மையத்திற்கு அனுப்பி ஆதார் அட்டையுடன் ஒப்ப்பிட்டு பார்க்கும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுவனின் புகைப்படத்துடன் சுவரொட்டி அடிக்கப்பட்டு வெளி மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் வெளி மாநிலத்திற்கும் செல்லும் பேருந்துகளில் காவல்துறையினர் ஒட்டியுள்ளனர்.
Must Read : ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்?
சிறுவனின் உயிரிழப்பு குறித்து எந்தவித தெளிவான விவரங்களும் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் தொடர் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தயாளர் - ஆ.குணாநிதி, விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boy, Crime News, Villupuram