• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரபிக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

அரபிக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வுபகுதி: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

மழை

மழை

மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகளில் ஒரே நாளில் உருவாகியுள்ள இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக தெற்கு தீபகற்ப பகுதியில் உள்ள மாநிலங்களில் அடுத்த 5 தினங்களுக்கு மழை நீடிக்கும் .

  • Share this:
    மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரேநாளில்  இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளன.  இதன் காரணமாக, தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன முத்த மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு  உருவாகியுள்ளது. இது அடுத்த 24  மணி நேரத்தில்  ஆந்திரா- ஒடிசாவை நோக்கி செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தமான் - நிக்கோபர் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத். ஒடிசாவிலும் கனமழை பெய்யக் கூடும்.

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், அர்நாடக மாநில கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

    மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபி கடல் பகுதிகளில் ஒரே நாளில் உருவாகியுள்ள இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக இந்திய நிலப்பரப்பில் தெற்கு தீபகற்ப பகுதியில் உள்ள மாநிலங்களில் அடுத்த 5 தினங்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100ஐ கடந்தது டீசல் விலை!


    தெற்கு கர்நாடகா, கடலோர  கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிதமான மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: