தலைமைச் செயலகத்தின் ராணுவ வளாகத்தில் இரு தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.. இருவர் கைது..

மாதிரி படம் - பிடிஐ

உயிரிழந்த பணியாளர்கள் ராஜா மற்றும் சந்தோஷ் உட்பட பிப்ரவரி மாதம் மட்டும் தமிழ்நாட்டில் 6 தூய்மைப் பணியாளர்கள் உயிரை இழந்துள்ளனர்.

 • Share this:
  தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கப்படுவது குற்றம் என்பது தெரிந்தும் இறக்கிவிடப்பட்டு அவர்களின் உயிரை இழக்கவைக்கும் கொடூரம் தொர்ந்து இழைக்கப்படுவது தொடரும் நிலையில், தலைமைச் செயலகத்தின் ராணுவ வளாகத்தில் இரு தூய்மைப் பணியாளர்களின் உயிரைப் பறித்திருக்கும் குற்றம் அரங்கேறியுள்ளது.

  40 வயதான ராஜா, 35 வயதான சந்தோஷ் ஆகிய இரு தூய்மைப் பணியாளர்கள், தமிழ்நாடு தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் MES ராணுவ அலுவலகத்துக்குள் இருக்கும் செப்டிங் டேங்குக்குள் இறக்கிவிடப்பட்டு. மூச்சுத்திணறலால் வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்துள்ளனர்.

  Times of India வெளியிட்ட தகவலின்படி, செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தோஷ் விஷவாயு கசிந்ததால் மயக்கமடைந்துள்ளார். அவரை மீட்கச் சென்ற ராஜா என்பவரும் மயக்கமடைந்துள்ளார். அதே பணியில் இருந்த வெங்கடேஷ் வெளியில் வந்துவிட்டார். ராஜாவையும், சந்தோஷையும் உடனடியாக ராணுவ அதிகாரிகள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் ராஜாவும், சந்தோஷும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  உயிரிழந்தவர்களுள் ஒருவரின் குடும்பத்தால் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்தின் கீழும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளரான ராஜிவ் என்பவரும், தூய்மைப் பணியாளர்களைப் பணியில் அமர்த்திய மேலாளரான கோபி கண்ணன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  உயிரிழந்த பணியாளர்கள் ராஜா மற்றும் சந்தோஷ் உட்பட பிப்ரவரி மாதம் மட்டும் தமிழ்நாட்டில் 6 தூய்மைப் பணியாளர்கள் உயிரை இழந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில், 43 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
  Published by:Gunavathy
  First published: