ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு தாக்கல்

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்துவதற்காக, அமமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

news18
Updated: April 24, 2019, 2:42 PM IST
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதை எதிர்த்து சசிகலா சீராய்வு மனு தாக்கல்
சசிகலா
news18
Updated: April 24, 2019, 2:42 PM IST
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியே என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதித்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில், அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்துவதற்காக, அமமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

டிடிவி தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளரானர். மற்றும் அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...