இரட்டை இலை சின்னம் யாருக்கு? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
இரட்டை இலை வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வரவில்லை என்றால் தேர்தல் ஆணையம் தினகரனின் மனு மீது முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இரட்டை இலை
- News18
- Last Updated: February 28, 2019, 7:27 AM IST
இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உரிமை கொண்டாடியபோது 2017 மார்ச் மாதம் அந்த சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையம், தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு அதே ஆண்டு நவம்பர் 23-ம் தேதி இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய தினகரன் ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அண்மையில் திருவாரூரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு அளித்திருந்தார்.
இரட்டை இலை வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வரவில்லை என்றால் தேர்தல் ஆணையம் தினகரனின் மனு மீது முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த சூழலில் இரட்டை இலை யாருக்கு என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.
இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா - தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உரிமை கொண்டாடியபோது 2017 மார்ச் மாதம் அந்த சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையம், தினகரன் தரப்புக்கு தொப்பி சின்னத்தையும், ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்கு மின் கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.

டெல்லி உயர்நீதிமன்றம்