• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் நியூஸ் 18-க்கு பேட்டி

தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் நியூஸ் 18-க்கு பேட்டி

அமைச்சர் செங்கோட்டையன்  (கோப்பு படம்)

அமைச்சர் செங்கோட்டையன் (கோப்பு படம்)

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 8-ம் வகுப்பு வரை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்களிலும் கட்டாய இந்தி என்ற மத்திய அரசின் பரிந்துரை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18-க்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.

    தமிழகத்தில் தற்போது இருக்கும் இருமொழிக்கல்விக் கொள்கையே தொடரும் என்று அவர் கூறினார்.

    இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுத இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

     

    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: