டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு!

கோப்புப் படம்

 • Share this:
  தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டன.

  ஊரடங்கால் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆங்காங்கே திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்நிலையில், மதுக்கூர் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக்கடையில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டன.

  இதுதொடர்பாக பட்டுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேல், சக்திவேல் ஆகிய இரண்டு சகோதரர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: