• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்கொல்லி புலியைப் பிடிக்க யானைகளுடன் காட்டிற்குள் சென்ற வனத்துறையினர்

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க யானைகளுடன் காட்டிற்குள் சென்ற வனத்துறையினர்

புலி

புலி

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர். இன்று மாலைக்குள் அந்தப் புலியை பிடித்துவிடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினக்குடியில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலி, இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளது. புலியை பிடிக்க தொடர்ந்து பத்தாவது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மசினக்குடி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி, தற்போது சிங்காரா வனப்பகுதியில் இடம் பெயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    நேற்றிரவு உள்ளூர் வாகன ஓட்டுநர், அந்த புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்துள்ளார். அவர் அளித்த அடையாளங்கள் மூலம், அது ஆட்கொல்லி புலிதான் என முடிவு செய்த வனத்துறையினர் சிங்காரா பகுதிக்கு விரைந்தனர். மிகவும் சோர்வுடன் புலி இருந்ததாக ஓட்டுநர் கூறிய நிலையில், இன்று அதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

    இதனிடையே புலி இருக்கும் இடத்தை அறிய சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திலிருந்து டைகர் எனும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஏற்கனவே அதவை மற்றும் ராணா ஆகிய மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், டைகரும் பணியில் இறக்கப்பட்டது.

    Must Read : சசிகலாவை தியாகத்தலைவி என்று அழைக்கக் கூடாது - ஜெயலலிதாவின் உதவியாளர்

    கும்கி யானை


    இந்நிலையில்,  புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறையினர் சீனிவாசன் மற்றும் உதயன் ஆகிய இரண்டு கும்கி யானைகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அந்த புலியை இன்று மாலைக்குள் பிடித்துவிடுவோம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: