கோவையில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் கைது

கோவையில் பேருந்து மீது கல்வீசி தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் கைது

மாதிரிப் படம்

கோவை செல்வபுரம் பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Share this:
கோவை செல்வபுரம் பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில், நேற்று ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் நடைபெற்றது. அப்போது அங்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிறிய கோவிலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவர் அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் தனியார் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களான ராஜேந்திரன், ராகுல் ராஜ் ஆகிய இருவரை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

Must Read : Night Curfew | கேரளா, புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு...

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
Published by:Suresh V
First published: