Home /News /tamil-nadu /

மாநாடு திரைப்படத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல்

மாநாடு திரைப்படத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல்

கோயம்புத்தூர் தியேட்டர்

கோயம்புத்தூர் தியேட்டர்

கோவையில் மாநாடு திரைப்படத்தின் போது கே.ஜி திரையரங்கில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள பிரபல திரையரங்கமான கே.ஜி திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிம்பு நடித்த "மாநாடு" திரைப்படம் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். திரையரங்கில் படம் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தபொழுது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இது தொடர்பாக தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்த நபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இரு தரப்பினர் மீதும் கலகம் செய்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    முகமது நிஷார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு தரப்பில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரன், கௌதம், கதிரவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடி வருகின்றனர்.

    இதே போன்று மகேஸ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது அசாருதீன், அப்துல்ரகுமான், முகமது அஸ்பர், முகமது சல்மான் ஷாநவாஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.இரு தரப்பிலும் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 7 நபர்களை பிடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி