முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Two-Finger Test: இந்த சோதனை, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Two-Finger Test: இந்த சோதனை, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Two-Finger Test: இந்த சோதனை, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டெய்லர் ராஜீவ் காந்தி, பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் இவர், தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ் குமார் அமர்வு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு மருத்துவர்கள் இரண்டு விரல் சோதனை நடத்துவது தற்போது வழக்கமாக உள்ளது.

இதையும் படியுங்கள் : மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி .. வடசென்னையில் 10 கோடி மதிப்பில் குத்துச்சண்டை வளாகம் - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பல மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு விரல் சோதனை நடத்துவதை தடை செய்துள்ளன என்று கருத்து தெரிவித்தனர்.

top videos

    மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.

    First published:

    Tags: Child Abuse, Sexual harrasment, Sexually harrassed