கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை

கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை
கோப்புப்படம்.
  • News18
  • Last Updated: September 23, 2018, 9:19 PM IST
  • Share this:
கருகிய பயிரைக் கண்டு மனம் தாங்காமல், நாகை மாவட்டத்தில், ஒரே வாரத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த பெருமழையால், காவிரியில் வழக்கத்தை விட இந்தாண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. எனினும் அந்நீரானது கடைமடை மாவட்டமான நாகையை எட்டாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. 49 வயதான இவர், அதே பகுதியில்,ஆறு ஏக்கர் குத்தகை நிலத்தில் நேரடி முறையில் நெல்விதைப்பு செய்திருந்தார். வெண்ணாறு பிரிவு பாசன வாய்க்காலான வாழ வாய்க்கால் மூலம் காவிரி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தண்ணீர் வருவது முற்றிலும் நின்றுபோனது. இதனால் தண்ணீர் இன்றி ராமமூர்த்தியின் வயல்கள் பாளம் பாளமாக வெடித்தன.


30 நாள் சம்பா பயிர்கள், கண்முன்னே கருகியதைக் கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி, பூச்சிமருந்தை குடித்தார். இதனையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல கடந்த 20-ம் தேதி சீர்காழி அடுத்துள்ள ஆதமங்கலம் கிராமத்தில் கர்ணன் என்ற விவசாயி பயிர் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

ஒரே வாரத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்