கொரோனா 2-வது அலைக்கு பிறகு கட்டுப்பாடு பகுதிகள் இல்லாத இரண்டு மாவட்டங்கள்

மாதிரி படம்

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத பகுதிகளாக ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் உருவெடுத்துள்ளன.

  கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ் நாட்டில் ஏழாயிரத்திற்கும் அதிகமான இடங்கள், கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், கடந்த மாதம் 25ம் தேதி நிலவரப்படி தமிழ் நாட்டில் மொத்தம் 2 ஆயிரத்து 298 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் அதிகபட்சமாக கோவையில் 401 கட்டுப்பாட்டு பகுதிகளும், அடுத்தபடியாக சென்னையில் 244 கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன. குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் இரண்டும் தருமபுரியில் மூன்று கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம், முற்றிலும் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக உருவெடுத்துள்ளன.

  Also Read : ’உதவி செய்ய வயது தடையில்லை…’ கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவும் 70 வயது நபர்!

  இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 5ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. வியாழன்கிழமை சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நேற்று பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவில்லை.

  Also Read : டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது தவணை தடுப்பூசி

  இந்த சூழலில், இன்று கோவை மாநகராட்சியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மண்டலத்திற்கு 200 தடுப்பூசிகள் என மொத்தம் ஐந்து மண்டலங்களில் ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. மார்ச் 31ம் தேதிக்கு முன்பு முதலாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள், இன்று நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் பயன்பெறலாம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: