பெரம்பலூரில் நேற்று பெய்த கோடை மழையில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

பெரம்பலூரில் நேற்று பெய்த கோடை மழையில் மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் உயிரிழப்பு

பசு மாடு இறந்த சோகத்தில் பெண் விவசாயி

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 2 பசு மாடுகள் உயிரிழந்தது.

  • Share this:
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. மதுரையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மதுரை நகர்ப் பகுதிகளான தெப்பக்குளம், ஐராவதநல்லூர், அண்ணாநகர், காமராஜர் சாலை, கோரிப்பாளையம், கே.கே நகர், மாட்டுத்தாவணி, புதூர், ஒத்தக்கடை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல திருச்சியிலும் மழை பெய்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. அப்போது பலத்த இடி மற்றும் மின்னலுடன் காற்றும் பலமாக வீசிய நிலையில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி வீட்டின் அருகே கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளை மின்னல் தாக்கியது.

    மேலும் படிக்க.. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 6 மாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு

    இதில் இரண்டு மாடுகளும் உயிரிழந்தது. உயிரிழந்த இந்த இரண்டு பசு மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு உரிய நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அந்த விவசாயி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்: ஆர் ராஜவேல்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: