திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிப்பு: ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிப்பு: ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியின்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில், இன்று மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணியின்போது, ஓயர் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், 40 நிமிடம் அளவுக்கு மின்சாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநேரத்தில், செயற்கை சுவாச உதவியுடன் இருந்த கொரோனா நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியின்போது ஒயர் துண்டிக்கப்பட்டது.
இதனால் 40 நிமிடம் அளவிற்கு மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 நபர்கள் இந்த நேரத்தில் உயிரிழந்துள்ளனர். ஒயர் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கான்ட்ராக்டருக்கு நோட்டிஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.