ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்தவருக்கு புதிய தொழில் தொடங்க உதவிய மாணவிகள்

ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்த இளைஞருக்கு இரு மாணவிகள் புதிய தொழில் தொடங்க உதவி செய்துள்ளனர்.

ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்தவருக்கு புதிய தொழில் தொடங்க உதவிய மாணவிகள்
ஊரடங்கால் தொழிலை இழந்து தவித்தவருக்கு புதிய தொழில் தொடங்க உதவிய மாணவிகள்
  • Share this:
புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோகிலா மற்றும் ஸ்ரீ சண்முகப்பிரியா என்ற இரு பெண்கள் புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இவர்கள் கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவந்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து உணவுக்கே வழியின்றி தவிக்கும் மக்களுக்கு இவர்களது நண்பர்கள் மூலம் பணம் திரட்டி உணவு, பால் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊசி பாசி விற்பவர்கள் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓர் இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாததால் ஊசி பாசி வியாபாரமும் செய்ய முடியாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு அடுத்தவேளை உணவிற்கு அல்லல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


Also read: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் நீடிக்கும் குழப்பம் - கல்வித்துறை ஆணையர் விசாரணை

இதை அறிந்த மாணவிகள் கோகிலா, ஸ்ரீ சண்முகப்பிரியா உள்ளிட்ட இருவரும் ஊசி பாசி விற்பனை செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு இவர்களது நண்பர்கள் மூலம் பணம் திரட்டி புதிய பேருந்து நிலையம் அருகே ரூபாய் 3,000 மதிப்பில் முகக்கவசம் கையுறை விற்கும் கடையை இலவசமாக அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மேலும், இந்தக் கடையின் மூலம் அந்த இளைஞர் நாளொன்றுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். கொரோனா ஊரடங்கால் அவதிப்பட்டு வந்த ஊசி பாசி விற்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞருக்கு கல்லூரி மாணவிகள் ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுத்து உதவியிருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading