ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரபலமாக வேண்டும் என்று செய்தேன் - செயின் பறிப்பு சம்பவத்தில் கைதான சிறுவனின் பகீர் வாக்குமூலம்

பிரபலமாக வேண்டும் என்று செய்தேன் - செயின் பறிப்பு சம்பவத்தில் கைதான சிறுவனின் பகீர் வாக்குமூலம்

கிங்ஸ்டன் (எ) கிங் (24)

கிங்ஸ்டன் (எ) கிங் (24)

சென்னையில் தொடர் செயில் பறிப்பில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் குற்றச்செயலில் ஈடுபட்டதாக சிறுவன் ஒருவன் வாக்குமூலம் தந்துள்ளான்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் கடந்த மாதம் 21ம் தேதி அவரது மாமியார் ஜோதிக்கு உடல்நிலை சரியில்லை என இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றுக்கொண்டு மருத்துவமனைக்கு பல்லாவரம் நோக்கிச் சென்றுள்ளார்.

  அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இருவர் தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினர். நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தமிழ்ச்செல்விக்கு சிறு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். சுமார் 312 சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வந்த நிலையில், ஊரப்பாக்கம் அய்யன்சேரி பகுதியில் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

  Also read: வேலூர்: மனைவியுடன் வேறு ஊருக்குச்சென்று வாழ்ந்து வந்த நபரை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது

  பழைய இரும்புக் கடை நடத்தி வரும் கிங்ஸ்டன் (எ) கிங் (24) என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்ததில், செயின் பறிப்பில் அவர் ஈடுபட்டதும், கிங்ஸ்டனும் அதே பகுதியைச் சேர்ந்த வாண்டு என்கின்ற 17 வயது சிறுவனும் கூட்டாகச் சேர்ந்து இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் ஐந்து வருடங்களாகவே புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளைக் குறிவைத்து, அங்கிருக்கும் புத்தம் புதிய இரும்புக் கம்பிகளைத் திருடி விற்பனை செய்து வந்ததும், இதற்காகவே பலமுறை சிறைக்குச் சென்று திரும்பியதும் தெரியவந்தது.

  தொடர்ந்து இரும்பு கம்பிகளைத் திருடினால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக வாண்டு என்கின்ற சிறுவன் கொடுத்த யோசனையில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். செயின் பறிப்புக்காக இருசக்கர வாகனத்தை ஒரு இடத்தில் திருடி, செயின் பறிப்பில் ஈடுபட்ட பிறகு அந்த இருசக்கர வாகனத்தை விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு சிக்கலாகவே இருந்துள்ளது.

  வாண்டு பள்ளிக்கரணை தாம்பரம் ஆகிய பகுதிகளில் 5 முறை செயின் பறிப்பில் ஈடுபட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டேன் என்று பகீர் வாக்குமூலம் போலீஸாரிடம் கூறி உள்ளார். இருவரிடமிருந்தும் 3 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்த போலீசார், வாண்டு என்பவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதோடு, கிங்ஸ்டனை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

  Published by:Rizwan
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Pallavaram