நம்ம கிட்ட இருக்கிற இரண்டு காரும் சொகுசு கார் தான் மா.. மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை..

நம்ம கிட்ட இருக்கிற இரண்டு காரும் சொகுசு கார் தான் மா.. மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை..

நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே என மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • Share this:
யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த ஜூன் 18-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்தும் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஜூலை மாதம் 6-ம்தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் பப்ஜி மதனை போலீசார் ஆஜர்படுத்தி உள்ளனர்.
கிருத்திகாவுடன், பப்ஜி மதனின் பெற்றோரும் அறிவுரை கழக வளாகத்தில் அவரை சந்திக்க வந்தனர்.

Also read: மும்மடங்கு பணம் திருப்பித் தருவதாக மோசடி: திருச்சி எல்பின் நிதி நிறுவன சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு!

குண்டர் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதனை அறிவுரைக்கழகம் உறுதி செய்தல் வேண்டும். அதனடிப்படையில் பப்ஜி மதன் அறிவுரை கழகத்தில் ஆஜராகி தன் மீது போடப்பட்டுள்ள குண்டாஸ் ரத்து செய்ய தன் தரப்பு வாதங்களை முன் வைக்க வேண்டும். இந்த நிலையில் இன்று அவர் ஆஜராகினார்.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் மாசிலாமணி, ரகுபதி, ராமன் ஆகியோர் முன் பப்ஜி மதன் ஆஜரானார். அப்போது அவரது மனைவி கிருத்திகா தனது குழந்தையுடன் சென்று வாதிட்டார்.

"தடை செய்யபட்ட ஆன்லைன் விளையாட்டை விளையாடவில்லை. சீனா செயலிதான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டை தான் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை. சாதாரண சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா அறிவுரை கழகத்தில் வாதிட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்த பின்னர் பப்ஜி மதனை சிறையிலடைக்க போலீசார் அவரை அழைத்து சென்றனர். குறிப்பாக போலீசார் பப்ஜி மதனை வேனில் அழைத்து வந்தபோது அறிவுரை கழக வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகாவும் சில மீட்டர் தூரம் தள்ளி இருந்த நிலையில் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பப்ஜி மதன் தனது மனைவிக்கு "நாம் வைத்திருக்கும் இரண்டு கார்களுமே சொகுசு கார்கள் தான். இனி நம்மிடம் சொகுசு கார் இல்லை என வெளியில் யாரிடமும் கூறாதே எனவும் மேலும், காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள இரண்டு கார்களையும் வழக்கறிஞர்களை வைத்து வெளியே எடுத்து விடு எனவும்" என அறிவுரை கூறினார்.
Published by:Esakki Raja
First published: