• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தினந்தோறும் விலை ஏறும் பெட்ரோல், டீசல்... சோலார் சைக்கிளை உருவாக்கிய சிறுவர்கள்!

தினந்தோறும் விலை ஏறும் பெட்ரோல், டீசல்... சோலார் சைக்கிளை உருவாக்கிய சிறுவர்கள்!

சோலார் சைக்கிள்

சோலார் சைக்கிள்

லாக்டவுனில் விடுமுறையில் சைக்கிளில் சுற்றுவது, யுடியூப் பார்ப்பது என நேரத்தை செலவிட்ட போதுதான் இது போல் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

  • Share this:
தினந்தோறும் ஏறும் பெட்ரோல், டீசல்  விலையைக் கண்டு சோலார் சைக்கிளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள்  உருவாக்கியுள்ளனர்.

செல்போனில் பொழுதை கழிக்கமால்  சோலாரில் இயங்கும் சைக்கிள் வடிவமைத்த சிவகங்கை சிறுவர்கள் அசத்தியுள்ளனர். 30கிலோ மீட்டர் வரை சோலார் மூலம்  செல்லலாம், மிதி வண்டியாகவும் பயன்படுத்தாலம். சுற்று சூழ்ல்களை  பாதுகாக்கவும் முடியும் என இந்த சிறுவனர்கள் நிறுபித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவகங்கையை சேர்ந்த அண்ணன், தம்பிகள் இருவர் சோலாரில் இயங்கும் வகையில் சைக்கிளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
சிவகங்கை காலேஜ் ரோட்டை சேர்ந்த வீரபத்திரன், அம்மணி தம்பதிகளின் மகன்கள் வீரகுருஹரிகிருஷ்ணன் (12), சம்பத்கிருஷ்ணன்(11). வீரகுருஹரிகிருஷ்ணன் திருப்புவனம் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பும், சம்பத்கிருஷ்ணன் (11) சிவகங்கை  பள்ளியில் ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.



கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படாத நிலையில்   சைக்கிளில் வலம் வந்த சிறுவர்கள் இருவரும் அதே சைக்கிளை வேறு விதமாக மாற்ற முடிவு செய்தனர்.  ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் விலை ஏறி கொண்டே செல்வதையும் பார்த்த சிறுவர்கள் சைக்கிள் வைத்து என்ன செய்யலாம் யோசித்து, சைக்கிளில் பெடல் செய்து ஓட்ட சிரமப்படும் முதியோர் குறித்து அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் மூலம் இயங்கும் சைக்கிளை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.



இயற்கைக்கு எதிராக இல்லாத சோலார் மூலம் இயங்கும் மோட்டார் பொருத்தி சைக்கிளை இயக்க முடிவு செய்து அதற்கான பொருட்களான பேட்டரி, மோட்டார், சோலார் பேனல்களை கடைகளிலும், ஆன் லைன் மூலமும் வாங்கி சைக்கிளில் பொருத்தி வெற்றிகரமாக இயக்கியுள்ளனர்.



இது குறித்து சிறுவன் விரஹ்ரிகிருஷ்ன் கூறியதாவது : லாக் டவுனில் விடுமுறையில் சைக்கிளில் சுற்றுவது, யுடியூப் பார்ப்பது என நேரத்தை செலவிட்ட போதுதான் இது போல் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்ததுதான் சோலார் மூலம் இயங்கும் சைக்கிள்.



சாதாரண சைக்கிள் முதல் அனைத்து வகையான சைக்கிளையும் இது போல் மாற்றலாம். சைக்கிளுடன் சேர்த்து ரூ.10ஆயிரம் மட்டுமே இதற்கு செலவாகும். சூரிய ஒளி படும் போது அதன் மூலமும் மற்றும் மின்சாரம் மூலம் 5மணி நேரம் சார்ஜ் செய்தால் 30கி.மீ தூரமும் செல்லும். சைக்கிளில் ஸ்விட்சை ஆன் செய்து விட்டால் 25முதல் 35கி.மீ வேகத்தில் மட்டும் தற்போதைய வடிவமைப்பில் செல்லும். வேகத்தை கூட்ட குறைக்க அதற்கான உபகரணங்கள் பொறுத்தி பார்க்கும் திட்டமும் உள்ளது.



Must Read : கொரோனா  15 லட்சம் குழந்தைகளை அனாதை ஆக்கியுள்ளதா? - பகீர் தகவல்

ஒட்டு மொத்தமாக 150கிலோ எடை வரை வைத்து இந்த சைக்கிளில் செல்லலாம். மேலும் சைக்கிலில் சார்ஜ் போட்டு கொள்ளலாம் என்கின்றனர் சிறுவர்கள்



கொரோன் காலகட்டத்தில் வீட்டில் இருந்து செல்போன்களில் பொழுதை கழிக்கமால் நேரத்தை எவ்வாறு நல்ல விதமாக செயல்படுத்த வேண்டும் என்பதற்க்கு இந்த சிறுவர்கள் ஓர் எடுத்து காட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: