சிறுமி 2 மாத கர்ப்பம்: மயிலாடுதுறையில் இருவர் போக்சோவில் கைது

சிறுமி 2 மாத கர்ப்பம்: மயிலாடுதுறையில் இருவர் போக்சோவில் கைது

மாதிரிப்படம்

வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகக் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகின்றது...

 • Share this:
  மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இருவரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

  மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை கீழத்தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் 45 வயதான கோபு. விவசாய கூலி தொழிலாளியான இவர்  17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.

  மேலும், திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் 28 வயதான  ரமேஷ் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே சிறுமியை திருமணத்திற்காக பெண் கேட்டுள்ளார். பெண் கொடுக்க சிறுமியின் பெற்றோர்  மறுத்து விட்டனர்.

  சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த ரமேஷ் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகக் கூறி மிரட்டியதாகக் கூறப்படுகின்றது.

  இந்நிலையில் அச்சிறுமிக்கு உடல்நிலை சரி இல்லாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அச்சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.  இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர்.

  Must Read : சட்டமன்ற தேர்தலில் இந்த 11 ஆவணங்களை காண்பித்தும் வாக்கு அளிக்கலாம்

   

  இது குறித்து விசாரணை நடத்தியி காவல்துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கோபு,  ரமேஷ்  ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  Published by:Suresh V
  First published: