Home /News /tamil-nadu /

சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு.. இருவர் கைது!

சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு.. இருவர் கைது!

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

பழைய வீடு என்பதால் அதை இடித்துவிட்டு அதில் உள்ள இரும்பு பொருட்களை அருகில் உள்ள இடத்தில் வைத்திருந்தனர்.

    சிவகங்கையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, போலீசார் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் நேற்று நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழகம் முழுவதும் பெரும்பாலும் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையில காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மறுபுறம், அ.தி.மு.க தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிளவு பெற்றது.

    உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஹெச்.ராஜா தீவிரமாக தி.மு.கவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார். அண்மையில் கூட ‘காத்திரு பகையே’ என்று காட்டமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

    திமுக சதி...வெற்றி பெறுவோருக்கு உடனுக்குடன் வெற்றி சான்றிதழ்: அண்ணாமலை வலியுறுத்தல்

    இந்நிலையில், சிவகங்கையில் உள்ள ஹெச்.ராஜா வீட்டில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஒன்பதாவது விதியில் எச்.ராஜாவுக்கு சொந்தமான வீடு இருந்தது, பழைய வீடு என்பதால் அதை இடித்துவிட்டு அதில் உள்ள இரும்பு பொருட்களை அருகில் உள்ள இடத்தில் வைத்திருந்தனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காலியிடத்தில் கிடந்த இரும்பு கதவுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜாவின் மருமகன் சூர்யா கொடுத்த புகாரின் பேரில், காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரைக்குடி கற்பக விநாயநகர் பகுதியைச் சேர்ந்த சோமு, வைரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து திருடிய இரும்பு பொருள்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: BJP, H.raja

    அடுத்த செய்தி