Home » News » Tamil-nadu » TWIST IN THE SUICIDE OF A YOUTH CAUGHT IN A POLICE CASE FOR UNKNOWINGLY BUYING A STOLEN MOBILE VIN ANB

திருட்டு மொபைல் என்று தெரியாமல் வாங்கியதால் போலீஸ் வழக்கில் சிக்கிய இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம்

வழக்கறிஞர் யோகேஸ்வரன் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான லெட்சுமணன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக எழும்பூர் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு மொபைல் என்று தெரியாமல் வாங்கியதால் போலீஸ் வழக்கில் சிக்கிய இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம்
லெட்சுமணன்
  • News18
  • Last Updated: January 11, 2021, 12:40 PM IST
  • Share this:
திருட்டு மொபைல் என்று தெரியாமல் வாங்கியதால் போலீஸ் வழக்கில் சிக்கிய இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரை பி.பி தோட்டத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் (25). மதுரையை பூர்வீகமாக கொண்ட பட்டதாரி இளைஞரான இவர் அம்பத்தூரில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு செகனண்ட் ஹேண்ட் மொபைல் ஒன்றை லெட்சுமணனின் தாய் அவரின் பயன்பாட்டிற்கு வாங்கிகொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6 ம் தேதி புளியந்தோப்பு போலீசார் லட்சுமணனின் வீட்டுக்குச் சென்று "தாங்கள் பயன்படுத்தும் மொபைல் போனானது திருட்டு மொபைல் எனவும் அதனால் விசாரணைக்காக புளியந்தோப்பு காவல் நிலையம் வருமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.


இதனையடுத்து கடந்த 7 ம் தேதி (புதன்கிழமை) லெட்சுமணன் மற்றும் அவரது வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் புளிந்தோப்பு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். விசாரணையில் தனக்கு மொபைல் பற்றி எந்த விவரங்களும் தெரியாது எனவும் மேலும் சில மாதங்களுக்கு முன்பாக இந்த மொபைலை செஹண்ட் ஹேண்டில் ஒரு பெண்ணிடமிருந்து தனது தாய் வாங்கி தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

போலீசார் மொபைல் விற்ற பெண்ணின் வீட்டை காட்டும்படி லெட்சுமணனை அழைத்து சென்றபோது அந்த பெண் சில மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்தப் பெண் குறித்த விபரங்கள் தேவைப்படும் போது நீங்கள் விசாரணைக்காக காவல்நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளதாக தெரிகிறது.

Also read... சத்தியமங்கலம் அருகே தமிழ்ப் பெயர் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜ்இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி மாலை லெட்சுமணன் நுங்கம்பாக்கத்தில் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வழக்கு பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீசார் லட்சுமணனின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற லட்சுமணன் தனது வழக்கறிஞரான யோகேஸ்வரன் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு விசாரணை முடிந்து லட்சுமணனும் அவரது வழக்கறிஞர் வீட்டிற்கு திரும்பிய நிலையில் வழக்கறிஞர் பீஸாக ரூபாய் 50,000 பணத்தை யோகேஸ்வரன், லெட்சுமணனின் குடும்பத்தாரிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும், மேலும் ரூபாய் 50,000 தர வேண்டுமெனவும் வழக்கறிஞர் கூறியதாகவும் அதற்கு லெட்சுமணன் குடும்பத்தார்கள் ஏற்கனவே ரூபாய் 50,000 தந்தமையால் மீண்டும் பணம் தர இயலாது என கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து வழக்கறிஞர் யோகேஸ்வரன் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான லெட்சுமணன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக எழும்பூர் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். உண்மையில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் பணம் கேட்டு மிரட்டியதால் லெட்சுமணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: January 11, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories