• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தி திணிப்பு புகார்: "உதவி ஆணையர் பாலமுருகன் செய்தது தெரியாது" - மற்றொரு அதிகாரி புகார் கடிதம்

இந்தி திணிப்பு புகார்: "உதவி ஆணையர் பாலமுருகன் செய்தது தெரியாது" - மற்றொரு அதிகாரி புகார் கடிதம்

ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன்.

ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன்.

சென்னையில் உள்ள சேவை வரி அலுவலகத்தில் இந்தி திணிப்பு நடைபெறுவதாக அதிகாரி ஒருவர் புகார் கூறிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    அண்ணா நகர் அலுவலகத்தில் திறன்வளர்ப்பு மற்றும் இந்தி பிரிவில் பணியாற்றும் பாலமுருகன் என்ற ஜிஎஸ்டி உதவி ஆணையர் மத்திய நேரடி வாரியத்துக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

    தற்போது இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் இந்தி எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்றும் விருப்பமில்லாத தம்மை இந்தி பிரிவில் பணியமர்த்தியுள்ளதாக பாலமுருகன் கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.



    இந்நிலையில், ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன் அளித்த புகாருக்கும் தனக்கும் தொடர்பு இல்லை. அவர் குறிப்பிட்ட மூன்று பேரில் ஒருவரான சுகுமார் என்ற அதிகாரி கூறியுள்ளா். இதுதொடர்பாக மத்திய நேரடி வரி வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ள சுகுமார், ஜிஎஸ்டி அலுவலக லெட்டர்பேடில் தனக்குத் தெரியாமல் தன் பெயரை பாலமுருகன் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: