தீபாவளிக்கு 20,000 சிறப்பு பேருந்துகள்: சென்னையில் தற்கால பேருந்து நிறுத்தங்கள்- விவரம்

news18
Updated: October 11, 2018, 8:30 PM IST
தீபாவளிக்கு 20,000 சிறப்பு பேருந்துகள்: சென்னையில் தற்கால பேருந்து நிறுத்தங்கள்- விவரம்
கோப்புப்படம்.
news18
Updated: October 11, 2018, 8:30 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கான 5 தற்காலிக பேருந்து நிலையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 11,367 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிற முக்கிய பகுதிகளில் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப வரும் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 4,207 பேருந்துகளும், பிற பகுதிகளுக்கு 7,635 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக, வரும் 3 முதல் 5-ம் தேதி வரை 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆந்திரா மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாகப் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள், சென்னை தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், செய்யார், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இவை தவிர மற்ற பகுதிகளுக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி வழியாக வண்டலூர் சென்று, ஊரப்பாக்கத்தில் காத்திருக்கும் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்பதூர்-செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...